டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம்...! விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் தெரியுமா...?
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து 78 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
நினைவுச் சின்னத்தின் கொத்தளத்திலிருந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் 'வளர்ச்சியடைநத பாரதம் @ 2047'. 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதலாக இந்த கொண்டாட்டங்கள் திகழும்.
சிறப்பு விருந்தினர்கள்
நாட்டின் உற்சாகமான இந்த பண்டிகையில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு செங்கோட்டையில் கொண்டாட்டங்களைக் காண சுமார் 6,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பழங்குடியின சமூகம், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் என வகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த மக்கள், பல்வேறு அரசாங்க திட்டங்கள் / முயற்சிகளின் உதவியுடன் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
அடல் புதுமை இயக்கம் மற்றும் பிஎம் ஸ்ரீ (எழுச்சி இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தின் மூலம் பயனடையும் மாணவர்கள், மேரா யுவ பாரத் (எனது பாரத்) மற்றும் ' என் மண் என் தேசம் திட்டத்தின் கீழ் தேசிய சேவைத் திட்டத்தின் தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். விருந்தினர்களில் பழங்குடி கைவினைஞர்கள் / வன செல்வ வளர்ச்சி உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஷெட்யூல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் நிதியளிக்கப்பட்ட பழங்குடி தொழில்முனைவோர்; மற்றும் பிரதம விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் வேளாண் உற்பத்தி மையங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர், துணை செவிலியர் மருத்துவச்சி (ANM) & அங்கன்வாடி தொழிலாளர்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்; சங்கல்ப்பின் பயனாளிகள்: பெண்களுக்கு அதிகாரமளித்தல் மையம், லட்சாதிபதி மகளிர் மற்றும் ட்ரோன் மகளிர் முயற்சிகள் மற்றும் சகி கேந்திரா திட்டம்; குழந்தைகள் நலப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினருக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னோடி வட்டங்கள், திட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒரு விருந்தினர்; எல்லைச் சாலைகள் அமைப்பின் தொழிலாளர்கள்; பிரேரானா பள்ளி திட்ட மாணவர்கள்; மற்றும் முன்னுரிமைத் துறை திட்டங்களில் செறிவூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.