முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

IND vs NZ | 46 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா..!! விராட் கோலி உட்பட 5 பேர் டக் அவுட்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

The Indian team shocked the fans by getting all out for 46 runs in the first innings.
01:32 PM Oct 17, 2024 IST | Chella
Advertisement

முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது இந்திய அணி.

Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாது நாளில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர், களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

ரோஹித் சர்மா 2 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் டக் அவுட்டாகியும் வெளியேறினார். அதிலும், சின்னச்சாமி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கினார்.

இதன் மூலமாக இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் ஜாகீர் கான் 43 முறை டக் அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். அதேபோல், இஷாந்த் சர்மா 40 முறை டக் அவுட்டாகி 2-வது இடத்திலும் உள்ளார். அதேபோல் நடப்பாண்டில் தொடர்ந்து 7-வது முறையாக அரைசதம் அடிக்காமல் விராட் கோலி வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Tags :
ரோகித் ஷர்மாவிராட் கோலி
Advertisement
Next Article