அதிகரித்து வரும் குரங்கம்மை தொற்று!. ஓராண்டுக்குள் தடுப்பூசி!. சீரம் நிறுவனம்!.
Monkeypox Vaccine: குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில்,ஈடுபட்டுள்ளதாகவும். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும்,என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கையாக, சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. நம் நாட்டுக்கு வரும் சர்வதேச பயணியருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா நேற்று பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும்,” என்றார்.
Readmore: தூள்…! நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து மையங்களாக மாற்றும் மத்திய அரசு…!