உயிரை பறிக்கும் Mpox வைரஸ்..!! உலகம் முழுவதும் பரவும் அபாயம்..!! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!!
கொரோனாவின் பாதிப்பில் இருந்தே உலகம் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி ஒன்று கிளம்பியுள்ளது. கொத்து கொத்தாக இதுவரை 450 பேருக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், Mpox வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகிறது. அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட mpox வைரஸ், உகாண்டா மற்றும் கென்யாவில் பரவியது. இது தற்போது கண்டம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிக்க வாய்ப்புள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு அறிக்கையில், ”அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவிப்பது அவசியமா? என்பதை தீர்மானிக்க பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும், கட்டுப்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.
Mpox வைரஸ் என்றால் என்ன..? காங்கோ 2022ஆம் ஆண்டு முதலில் அறிவிக்கப்பட்ட mpox வைரஸ் காரணமாக தேசிய அவசரநிலையை அறிவித்தது. Mpox வைரஸ் அல்லது குரங்கு பாக்ஸ் வைரஸ் என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இது தோல் வெடிப்பு, தலைவலி, காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். ஒரு தொற்று நோயாக இருப்பதால், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட பிறகு இந்த வைரஸ் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.
Read More : BREAKING | விடிந்ததுமே பரபரப்பு..!! சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டர்..? 2 போலீசார் படுகாயம்..!!