For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் அதிகரித்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை! ஒரே நாளில் 4.71 லட்சம் பேர் பயணம்…

12:46 PM Apr 23, 2024 IST | Mari Thangam
இந்தியாவில் அதிகரித்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை  ஒரே நாளில் 4 71 லட்சம் பேர் பயணம்…
Advertisement

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு விமான பயணம் மேற்கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கை 3,98,579 ஆக இருந்தது. இந்நிலையில், நோய் தொற்று காலத்துக்கு பின்பு மீண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) இதுவரை இல்லாத அளவுக்கு உள் நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து அன்றைய தினத்தில் மட்டும் 6,128 விமானங்களில் 4,71,751 பேர் பயணித்துள்ளனர். இது விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அன்று, 5,899 விமானங்களில் 4,28,389 பேர் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது உறுதியான கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் குறைந்த விலையிலான விமானப் பயண கட்டணம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது. அதிகமான மக்கள் விமானப் பயணத்தை தேர்ந்தெடுப்பதால், இந்தத் துறை தொடர்ந்து வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது" என பதிவிட்டிருந்தனர்.

Tags :
Advertisement