தீபாவளிக்கு முன்னதாகவே அதிகரித்த காற்று மாசு..!! திணறும் சென்னை..!! பாதிப்பு உறுதி..!!
தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதால், சென்னையில் காற்றுமாசு அதிகரித்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 10 முதல் 20 வரை பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 169, அரும்பாக்கம் 134, கொடுங்கையூர் 12, மணலி 109, ராயபுரம் 121, கும்மிடிப்பூண்டி 230, வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
101-200 என்ற அளவு மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 201-300 என்ற அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல், இதயநோய் உள்ளவர்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம்.
கொரோனா கால கட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த காற்று மாசு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாகவே டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை நீடித்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதும் பரவியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.