முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காவிரியில் 61,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு...! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Increase of water flow in Cauvery to 61,000 cubic feet
01:34 PM Jul 21, 2024 IST | Vignesh
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 61,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கர்நாடகா, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்று கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. இன்று மேலும் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து 1,00,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 5-வது நாளாக இன்று பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாகி வருவதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
cauvery riverdharmapuriWater
Advertisement
Next Article