For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாகன விபத்தில் உயிரிழக்கும் நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் ஆக உயர்வு...!

Increase in compensation to Rs 2 lakh for persons who die in vehicle accidents
11:14 AM Aug 08, 2024 IST | Vignesh
வாகன விபத்தில் உயிரிழக்கும் நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ 2 லட்சம் ஆக உயர்வு
Advertisement

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் "இந்தியாவில் சாலை விபத்துகள்" என்ற அறிக்கையை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையின்படி, 2018 முதல் 2022 காலண்டர் ஆண்டு வரை நாட்டில் நடந்த சாலை விபத்துகள், உயிரிழப்புகள், காயமடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை விவரங்களை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் மாநிலங்களவையில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

2018 முதல் 2022 காலண்டர் ஆண்டு வரை நாட்டில் நடந்த மொத்த சாலை விபத்துக்கள், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த நபர்களின் மாநில வாரியான விவரங்கள் படி தமிழ்நாட்டில் 2018-ம் ஆண்டு 67,279 விபத்துகளும், 2019-ம் ஆண்டு 62,685 விபத்துகளும், 2020-ம் ஆண்டு 49,744 விபத்துகளும், 2021-ம் ஆண்டு 55,682 விபத்துகளும், 2022-ம் ஆண்டு 24,105 விபத்துகளும் நடந்துள்ளன.

இதேபோல், புதுச்சேரியில் 2018-ம் ஆண்டு 1,597 விபத்துகளும், 2019-ம் ஆண்டு 1,392 விபத்துகளும், 2020-ம் ஆண்டு 969 விபத்துகளும், 2021-ம் ஆண்டு 1,049 விபத்துகளும், 2022-ம் ஆண்டு 1,181 விபத்துகளும் நடந்துள்ளன. சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2018-ம் ஆண்டு 18,392 பேரும், 2019-ம் ஆண்டு 18,129 பேரும், 2020-ம் ஆண்டு 14,527 பேரும், 2021-ம் ஆண்டு 15,384 பேரும், 2022-ம் ஆண்டு 17,884 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் புதுச்சேரியில் 2018-ம் ஆண்டு 226 பேரும், 2019-ம் ஆண்டு 147 பேரும், 2020-ம் ஆண்டு 145 பேரும், 2021-ம் ஆண்டு 140 பேரும், 2022-ம் ஆண்டு 181 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம்: 2018-ம் ஆண்டு 69,834 பேர், 2019-ம் ஆண்டு 63,132 பேர், 2020-ம் ஆண்டு 47,618 பேர், 2021-ம் ஆண்டு 55,996 பேர், 2022-ம் ஆண்டு 67,703 பேர்.

புதுச்சேரியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம்: 2018-ம் ஆண்டு 1,727 பேர், 2019-ம் ஆண்டு 1,619 பேர், 2020-ம் ஆண்டு 1,019 பேர், 2021-ம் ஆண்டு 1,099 பேர், 2022-ம் ஆண்டு 1,282 பேர். நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இதன்படி, சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முகமைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம்/வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை குறித்து மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள், நிபுணர்கள் மூலம் சாலைப்பாதுகாப்பு தணிக்கை, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் வாகனங்களால் விபத்தை ஏற்படுத்தி, தப்பிச்சென்றுவிடும் நேர்வுகளில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 25 ஆயிரம் என்பதிலிருந்து ரூ.2 லட்சமாகவும், படுகாயமடைந்தோருக்கான இழப்பீட்டுத்தொகை ரூ.12,500 என்பதிலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement