For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

INCOME TAX: வருமான வரி தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் ரீஃபண்ட்.! மத்திய அரசின் அசத்தலான திட்டம்.!

10:44 AM Feb 25, 2024 IST | 1newsnationuser7
income tax  வருமான வரி தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் ரீஃபண்ட்   மத்திய அரசின் அசத்தலான திட்டம்
Advertisement

INCOME TAX: தனிநபர் வருமானம் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது தங்களது வருமான வரி வரம்பிற்கு உட்பட்ட தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்களுக்கான ரீஃபண்ட்டை வருமான வரித்துறை வழங்கும். இதனை பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

Advertisement

தற்போது வருமான வரி(INCOME TAX) ரீஃபண்ட் வரி செலுத்துவோருக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் புதிய ஏற்பாடுகளை மத்திய அரசின் வருமான வரித்துறை செய்து வருகிறது. இதற்காக 4,241 கோடி ரூபாய் செலவில் புதிய மென்பொருள் மற்றும் இணையதளம் தயாரிக்கும் செயல் திட்டங்கள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

வருமான வரித்துறை விதிகளின்படி தனிநபர் மற்றும் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தங்களது வருமான வரி கணக்கை மதிய வருமான வரித்துறையில் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல நிறுவனங்கள் தங்களது வருமான வரி கணக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய வேண்டும். இது தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்த வருடம் மார்ச் மாதம் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருந்தால் அதற்குரிய வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

மாத ஊதியம் வாங்குபவர்கள் மற்றும் தனிநபர் வருமானம் ஈடுபவர்கள் தங்களது வருமான வரியை விட அதிக தொகையை வரியாக செலுத்தியிருந்தால் அதற்கான ரிட்டன் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களில் உபரித்தொகை ரீபண்ட் செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது . மேலும் இது 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை கூட தாமதம் ஆகலாம்.

வருமான வரி(INCOME TAX) ரீபண்ட் காலதாமதம் ஆவதற்கு வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளம் மற்றும் வருமான வரி செலுத்த உதவும் இணையதளம் ஆகியவை இரு வேறு நிறுவனங்களால் நிர்வாகிக்கப்படுவது காரணமாக கூறப்படுகிறது. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணையதளத்தை டிசிஎஸ் நிறுவனம் நிர்வாகித்து வந்தது. வருமான வரி செலுத்த உதவும் இணையதளத்தை இன்ஃபோசிஸ் நிர்வகித்தது. இதன் காரணமாக காலதாமதம் ஏற்படுவதோடு மத்திய அரசு அதிக வட்டி தொகையையும் செலுத்த வேண்டி இருந்தது.

இவற்றை சீர்படுத்தும் நோக்கத்துடன் வருமான வரி ரிட்டன் செய்யும் இணையதளம் மற்றும் வருமான வரி செலுத்த உதவும் இணையதளம் ஆகியவற்றை இன்போசிஸ் நிறுவனம் நிர்வாகிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு அந்த நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு மத்திய அரசு இலக்கும் வட்டி விகிதமும் தவிர்க்கப்படும்.

இது தொடர்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் பேட்டியளித்த மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திரா " வருமான வரி ரிட்டன் மற்றும் ரீபண்ட் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கு 4,241 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்து இருந்தார். மத்திய வரிகள் வாரியம் வரி ரிட்டன் செய்யும் இணையதளத்தை எளிமையாக்கி மேம்படுத்தி வருகிறது. இது எவ்வாறு பலன் அளிக்கும் என்பது அந்த இணையதளம் நடைமுறைக்கு வந்த பின்பு தான் தெரியும். மக்களுக்கு இது எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பொறுத்து தான் மத்திய வரிகள் வாரியத்தின் வெற்றி இருக்கிறது என உலகின் தலைசிறந்த தணிக்கை தலங்களில் ஒன்றான டிலோயிட் நிறுவனம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் " ஒரு செலுத்துபவர்களுக்கு வழங்க வேண்டிய ரீஃபண்ட் தொகையை திரும்ப செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் கால விரயம் ஆனதோடு மத்திய அரசும் அதிக வட்டி தொகை செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை தவிர்ப்பதற்காக புதிய மென்பொருள் செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது கால விரயத்தை தடுப்பதோடு மத்திய அரசு அதிக பணம் செலுத்துவதும் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வருமான வரியில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

English Summary: Central govt to introduce 24 hours refund for income taxpayers.

Tags :
Advertisement