முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

20 கோடியில் மகன் திருமணம்... நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை...!

Income Tax Department raids highway contractor's house.
06:16 AM Nov 27, 2024 IST | Vignesh
Advertisement

20 கோடி ரூபாயில் தனது மகன் திருமணத்தை நடத்திய வருமான வரி சோதனை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர் எஸ் முருகன் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.முருகன், 65; நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். அ.தி.மு.க., பிரமுகரான இவர், திருச்செந்துார் முதல் பாபநாசம் வரை, திருநெல்வேலி முதல் தென்காசி வரை என, பல்வேறு நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமிபத்தில் 20 கோடியில் இவரது மகனின் திருமணம் நடைபெற்றது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. திருமணத்தில் வருமானவரித்துறை உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். வருமான வரி சோதனை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக 20 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதையடுத்து நெல்லை மாவட்டத்தில் முருகனுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாலையில் துவங்கிய சோதனை இரவிலும் தொடர்ந்தது.

Tags :
ContractHigh way departmentincome taxincome tax raidnellai
Advertisement
Next Article