ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து கோவில் திறப்பு!… பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்!… கங்கை, யமுனையில் இருந்து நீர்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த கோவிலுக்கு கங்கை யமுனையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள அழகிய சுப்ரமணியன் சுவாமி மஹாமந்திர் (Shree Swaminarayan Akshardham Temple) என்ற முதல் இந்து கோயில் திறந்து வைக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கட்டப்படும் முதல் பாரம்பரிய கல் கோயில் என்பதுடன், அனைத்து மதத்தினருக்கும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சிறப்புகள்: இது பாரம்பரிய இந்து கல் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டுமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆதரவுடன் 2019 இல் தொடங்கப்பட்டது. கோயிலுக்கான நிலத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நன்கொடையாக வழங்கியது. கோவில் கட்டுமானத்திற்கு சுமார் 1 பில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 7 ஏக்கர் நிலப்பரப்பில் 262 அடி நீளம், 180 அடி அகலம், 108 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கோவில், சிக்கலான கைவினைப்பொருட்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இது கலைப் பிரியர்களை கவரும். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைக்கூடம், நூலகம், கல்வி மையம் ஆகியவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஏழு சிகரங்கள் அமீரகத்தின் ஒற்றுமையைக் குறிக்கும்.
வரலாற்று முக்கியத்துவம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்து கோவில் திறப்பு என்பது மத சகிப்புத்தன்மை மற்றும் இணைவாழ்வின் சிறந்த உதாரணமாகும்.2.6 மில்லியன் இந்துக்கள் வசிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்து சமூகத்திற்கு இது மிகவும் முக்கியமான தருணம். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அங்குள்ள கலாச்சார பன்முகத்தன்மையையும் வலுப்படுத்தும். இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு இடையேயான வளர்ந்து வரும் உறவின் அடையாளமாகவும் இது பார்க்கப்படுகிறது. தற்போது கோவில் திறப்பு விழா பொதுமக்களுக்கான நிகழ்வாக இருக்காது. இதற்கு சிறப்பு அனுமதி தேவைப்படும். மேலும் இந்த கோவில் மார்ச் 1, 2024 முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த கோவிலுக்கு புனிதமாக கருதப்படும் கங்கை, யமுனை நதியில் இருந்து நீர் மற்றும் ராஜஸ்தானில் இருந்து இளஞ்சிவப்பு மணற்கல் ஆகியவை அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. BAPS இன் சர்வதேச உறவுகளின் தலைவர் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் கூறுகையில், "கோயிலின் உள்ளே பிரார்த்தனை கூடங்கள், உணவு விடுதிகள், சமூக மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து தளபாடங்களும் பெட்டிகள் மற்றும் டிரங்குகளில் இருந்து மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. கற்கள். கோவிலின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியாவின் ஒரு பகுதி உள்ளது" என்று கூறினார்.