3 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பும் காதலனுடன் தகாத உறவு..!! இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கணவன்..!!
காதலனுடன் தகாத உறவில் இருந்த மனைவியை காதலனுடனேயே அனுப்பி வைத்துள்ளார் பீகாரில் வசித்து வரும் கணவர் ஒருவர்.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் தனது காதலனுடன் தொடர்ந்து கள்ள உறவில் இருந்து வந்துள்ளார்.
இதையறிந்த அந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இருவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்துள்ளனர். ஆனால், அந்த நபரும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும், இருவரும் தொடர்ந்து காதலித்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவனின் சம்மதத்துடன் இருவரது திருமணமும் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இருவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கிராம மக்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Read More : அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு கேடு..!! உயிருக்கு ஆப்பு வைக்கும் யூரிக் அமிலம்..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!