வாஸ்துபடி 2025 காலண்டரை எந்த திசையில் தொங்கவிட வேண்டும்..? பழைய காலண்டரை என்ன செய்யலாம்..?
புத்தாண்டு பிறந்தாலே, முதலில் வீட்டில் உள்ள பழைய காலண்டரை அகற்றிவிட்டு, புதிய காலண்டரை மாற்றுவோம். அப்படி காலண்டரை மாற்றும் போது கண்ட இடங்களில் அவற்றை தொங்கவிடக் கூடாது. எப்போதும் சரியான திசையில், சரியான இடத்தில் மாட்ட வேண்டும். ஏனெனில், வாஸ்துப்படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வாஸ்துப்படி காலண்டரை வீட்டில் எங்கு, எந்த திசையில் தொங்கவிட வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வீட்டில் புதிய காலெண்டரை தொங்கவிடும் போது, பழைய காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும். புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கிறது. பழைய காலண்டர் கடந்த காலத்தை குறிப்பதால், அதை அப்புறப்படுத்தாமல் வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். முக்கியமாக பழைய காலண்டருக்கு மேல் புதிய காலெண்டரை தொங்கவிடக் கூடாது. பழைய காலண்டரை வீட்டில் சேமித்தும் வைக்கக் கூடாது. ஒருவேளை பழைய காலண்டரில் கடவுள்களின் படம் இருந்தால், அதை கண்ட இடத்தில் தூக்கி போடாமல், ஆற்றில் போட்டு விடுங்கள்.
எந்த திசையில் காலண்டரை வைக்க வேண்டும்..?
* வாஸ்துப்படி, காலண்டரை வைக்க சிறந்த திசை மேற்கு ஆகும். இந்த திசையானது ஆற்றல் ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும். வீட்டில் பண வரவையும் அதிகரிக்கும்.
* அடுத்ததாக வடக்கு திசையில் காலண்டரை வைக்கலாம். இந்த திசை செல்வத்தின் தெய்வமான குபேரன் குடியிக்கும் திசை. இந்த திசையில் காலண்டரை வைக்கும் போது, வீட்டில் இருப்பவர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள், பண வரவை கொண்டு வரும்.
எந்த இடத்தில் காலண்டரை வைக்கக்கூடாது..?
* காலெண்டரை எப்போதும் தெற்கு திசையில் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் பண இழப்புகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே, இந்த திசையை தவிர்த்திடுங்கள்.
* காலண்டரை எப்போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு பின் அல்லது அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த இடத்தில் வைத்தால், அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றம் மற்றும் வெற்றியில் தடையை ஏற்படுத்தும். எனவே, இந்த பகுதியிலும் காலண்டரை வைக்க வேண்டாம்.