Lok Sabha தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி..? சின்னம் இதுதான்..!! திருமாவளவன் பரபரப்பு பதில்..!!
Lok Sabha | கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 2 இடங்களைப் பெற்றது. அதில், சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் துரை.ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். அவர்களில் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்று விட, திருமாவளவன் வெற்றிக்கு போராட வேண்டியிருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் போராடி வெற்றி பெற்றார்.
அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு திருமாவளவன் பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பிற சமூக மக்களிடம் இருந்து வருகிறது. அதனால், இம்முறை திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட வேண்டாம் என்பதாக திமுகவினர் கூறிவந்தனர். விடுதலைச் சிறுத்தைகளும் அதை ஆமோதித்தனர். அதனால் எதிர்வரும் தேர்தலில் திருமாவளவன் திருவள்ளூர் தொகுதிக்கு மாறுவார் என்று பேசப்பட்டது. ஆனால், இந் நிலையில் அவர் மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடப் போகிறேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
Read More : ’Rajya Sabha சீட் தர முடியாது’..!! உறுதியாக நிற்கும் அதிமுக..!! கூட்டணி தாவுகிறதா தேமுதிக..?
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிதம்பரம் எனது சொந்தத் தொகுதி, அதனால் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடப் போகிறேன்" என்று உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போகிறார் என்பதாக பரவிய தகவல்களையும் மறுத்தார். பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அவர் தெரிவித்தார். திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதி உட்பட 4 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும் தங்களது கோரிக்கையை திமுக ஏற்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary : Thirumavalavan has said that he will contest again from Chidambaram constituency in the Lok Sabha elections