அதிர்ச்சி...! திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் சிகரட் துண்டு...!
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் சிகரட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலஉத்தரவின்பேரில், இதற்கான விளக்க அறிக்கையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அளித்தது. தேவஸ்தான நிர்வாக அதிகாரிசியாமள ராவ் நேற்று அமராவதிக்கு சென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இந்த அறிக்கையை அளித்தார். இதுதொடர்பாக சுமார் 2 மணி நேரம் வரை ஆலோசனையும் நடத்தப்பட்டது. கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்கு பரிகாரமாக 3 நாட்கள்சிறப்பு யாகங்கள் செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். 3 நாட்களுக்கு பதிலாக, ஒருநாள் யாகம் செய்ய சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கான சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் சிகரட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்டு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த நபர் சமீபத்தில் திருப்பதி சென்ற நிலையில், அங்கு வழங்கப்பட்ட லட்டில் சிகரெட் துண்டு, குட்கா பாக்கெட் இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.