Diwali 2024 | தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய கோயில்கள்..
தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, பட்டாசு வெடித்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இந்தியாவின் இந்த நாளில் லட்சுமி தேவியை வேண்டி, மண் விளக்கு ஏற்றி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தீபாவளிக்கு எந்தெந்தக் கோயில்களுக்கு செல்லலாம் என்பதைப் இங்கே பார்ப்போம்.
அயோத்தி ராமர் கோவில் : உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் கொண்டாடும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று, ராமர் பிறந்த அயோத்தியில் உள்ள கோயிலுக்கு செல்லலாம்.
கோலாப்பூர் மகாலட்சுமி : மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலுக்கும் செல்லலாம். கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் உலகின் 52 சக்தி பீடங்களில் முதன்மையானது என்று நம்பப்படுகிறது. அங்கு தீபாவளியின் முதல் நாளில் தனித்துவமான சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. தீபாவளியன்று இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்மீக அனுபவத்தைப் பெறுவார்கள்.
அன்னபூரணி தேவி ஆலயம் : உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் உள்ள அன்னபூரணி தேவி ஆலயம். இங்கு பக்தர்கள் பார்வதி தேவியை வழிபடுகின்றனர். தீபாவளி கொண்டாட்டத்தின் போது தேவியின் தங்க சிலை கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இந்த நேரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. தீபாவளியின் போது கோயில் நீண்ட நேரம் திறந்திருக்கும். தீபாவளி நாட்களில் நடைபெறும் கோயிலின் முக்கிய விழாக்களில் கோவர்த்தன பூஜையும் ஒன்று.
கோவர்தன மலை : உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தன மலை, தீபாவளியின் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். பேரழிவு தரும் மழையிலிருந்து மதுரா மக்களை காப்பாற்ற கிருஷ்ணர் தனது சுண்டு விரலில் அந்த மலையைத் தூக்கினார். இதை நினைவுகூரும் வகையில், பக்தர்கள் கோவர்தன பரிக்கிரமா என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. தீபாவளிக்குப் பிறகு, கோவர்தன பூஜை உள்ளிட்டவை இங்கு செய்யப்படுகிறது.
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாக அறியப்படுகிறது. சீக்கியர்களின் முக்கிய பண்டிகையான பந்தி சோர் திவாஸ்(Bandi Chor Diwas), சீக்கியர்களின் ஆன்மீக குருவான குரு ஹர்கோவிந்த் முகலாய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் இங்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் போது, பொற்கோயில் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
Read more ; அடிக்கடி சண்டை.. கணவரை விவாகரத்து செய்யும் நடிகை ரம்பா? அவரே பகிர்ந்த தகவல்..