மதுரை மீனாட்சியின் மறு அவதாரம்.. அனைத்து தடைகளையும் நீக்கும் மீன் குளத்தி பகவதி அம்மன்..!! மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு..
கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனும் இடத்தில் மீன் குளத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடி மரத்தை செப்பு தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர்.
இக்கோவிலில் சப்த மாதர்கள், பரமேஸ்வரன், பைரவர், கணபதி, வீரபத்ரர், துர்க்கை, சாஸ்தா, பிரம்ம ராட்சஸ் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே பெரியகுளம் ஒன்று உள்ளது. இதில் நிறைய மீன்கள் காணப்படுகின்றன. சித்திரை மாதம் அஸ்த நட்சத்திர நாளில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாளையே அம்மனின் பிறந்த நாளாக கருதி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஸ்தல வரலாறு : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீர சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் அப்பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் வணிகத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் கேரளா மாநிலத்தில் உள்ள பல்லசனா பகுதியில் தங்கினர் ,அப்பகுதி மிகுந்த வளமான பகுதியாக இருந்தது அங்கேயே வைர வணிகத்தை செய்து வளமடைந்தனர். வெளியில் வைர வணிகத்திற்கு செல்வதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து வருவார்கள் . ஒரு முறை வணிகர் மதுரை செல்வதற்கு முன்பு அங்குள்ள குளத்தின் அருகில் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு நீராட சென்றார். அப்பொழுது அவர் குளித்துவிட்டு கரையேறி வரும் பொழுது அந்தப் பொருள்களை எடுக்க முயன்றார் ஆனால் அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை.
பிறகு தன் குடும்பத்தினரை அழைத்து முயற்சி செய்து பார்த்தார் அப்போதும் முடியாமல் போனது பிறகு அசரீரி ஒலித்தது. இந்த தள்ளாடும் வயதில் என்னை தரிசிக்க மதுரை வர வேண்டாம் உனக்காக நானே இங்கு வந்துள்ளேன் என்று குரல் ஒலித்தது. இதனால் அம்மனுக்கு அங்கேயே கோவில் எழுப்பினர். கோவில் கருவறைக்குள் அம்மன் பகவதி அம்மனாக அருள் பாலிக்கிறார் . மீன்கள் அதிகமாக விளையாடும் குளத்தின் அருகே தோன்றியதால் மீன்குளத்தி பகவதி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பலன்கள் : குளத்தில் நீராடி அம்மனை தரிசித்தால் திருமண தடை நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக வணிகத் தொழில் செய்பவர்கள் அங்கு சென்று வந்தால் தொழில் விருத்தி ஆகும். மன தெளிவு கிடைக்கும். பஞ்சத்தில் வந்தவர்கள் பசியாறி செல்வ வளம் அடைந்தனர் என்பது இக்கோயிலின் மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.
கோவிலின் கட்டுப்பாடுகள் : ஆண்கள் மேல் சட்டை ,பனியன் அணிய கூடாது. வேஷ்டி கட்டிக் கொண்டு தான் உள்ளே வருவதற்கான அனுமதி உள்ளது. முதன் முதலில் தொழில் செய்ய துவங்குபவர்களும், தொழிலில் தடை மற்றும் தோல்வி இருப்பவர்களும் அன்னை மீன்குளத்தி பகவதி அம்மனை ஒரு முறை வழிபட்டு வந்தால் தொழில் தடை நீங்கி தொழில் விருத்தி பெற்று செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
Read more ; நம்பர் 1 கோடீஸ்வரர்.. ஆனா தினமும் வீட்டில் இந்த சாப்பாடு தான்..!! – அம்பானி வீட்டு உணவு முறை ஒரு பார்வை..