For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த விஷயத்தில் பள்ளிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என எதற்கும் இரக்கம் காட்ட முடியாது..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

The High Court judges have categorically stated that no mercy can be shown to schools, churches, mosques, or temples that have been built illegally.
10:54 AM Dec 24, 2024 IST | Chella
இந்த விஷயத்தில் பள்ளிகள்  கோயில்கள்  தேவாலயங்கள்  மசூதிகள் என எதற்கும் இரக்கம் காட்ட முடியாது     சென்னை ஐகோர்ட் அதிரடி
Advertisement

விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் என எதற்கும் இரக்கம் காட்ட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னை கொளத்தூர் வில்லிவாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக 3 மாடிகளை கட்டியுள்ளதாக அந்த பள்ளிக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீஸை எதிர்த்தும், சட்ட விரோதமாக கட்டியுள்ள கூடுதல் கட்டிடத்தை இடிக்க தடை விதிக்கக் கோரியும், பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்ட விவகாரத்தில் அரசு கருணை காட்ட வேண்டும். பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது ஒருதலைபட்சமானது என பள்ளி நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ”தி.நகரில் உள்ள விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. சட்ட விரோதமாக விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள் மட்டுமல்ல, தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதுவாக இருந்தாலும் இரக்கம் காட்ட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

அதே நேரம், 1,500 மாணவர்கள் இந்த பள்ளியில் படிப்பதாக கூறியிருப்பதால், இந்த கல்வியாண்டு முடியும்வரை அதாவது வரும் 2025 ஏப்ரல் வரை மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளிக்கு எதிராக சென்னை மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. எங்களால் இந்த அளவுக்கு மட்டும்தான் இரக்கம் காட்ட முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : இனி CALL, SMS-க்கு தனித்தனி ரீசார்ஜ்..!! 30 நாட்களுக்குள் வேலையை முடிங்க..!! டிராய் அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement