For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

WiFi Password மறந்துட்டீங்களா ? இதை செய்தால் போதும்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

In this collection we will see some ways on how to recover Wi-Fi password on devices like computers that we use.
01:46 PM Jul 02, 2024 IST | Mari Thangam
wifi password மறந்துட்டீங்களா   இதை செய்தால் போதும்   ஈஸியா கண்டுபிடிக்கலாம்
Advertisement

நாம் பயன்படுத்தும் கணினி போன்ற சாதனங்களில் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது குறித்து சில வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. உங்கள் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில், அலுவகம் அல்லது வீட்டில் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் ஒருமுறை இணைத்துவிட்டால், கடவுச்சொல்லை மாற்றாதவரை, அந்த நெட்வொர்க்குடன் மீண்டும் இணைப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அதே நேரத்தில் WiFi நெட்வொர்க்குடன் மற்றொரு கேட்ஜெட்டை இணைக்க வேண்டும் என்றால் பாஸ்வேர்ட் தேவைப்படும். இந்த சூழலில், பல பேர் வைஃபை பாஸ்வேர்டை மறந்து விடுகின்றனர்.

அந்த வகையில், நாம் பயன்படுத்தும் கணினி உள்ளிட்ட சாதனங்களில் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இந்த சில வழிகளை கொண்டு மீட்டெடுக்கலாம். அந்தவகையில், விண்டோஸிலிருந்து Start > Control Panel > Network and Sharing Center என்பதற்கு சென்று, விண்டோஸ் கம்ப்யூட்டரில் Windows key + C ஐ தட்டவும். பின்னர் நெட்வொர்க் மற்றும் பகிர்வு மையத்தைக் கண்டறிந்து, அடாப்டர் அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்து, வைஃபை நெட்வொர்க்கில் வலது கிளிக் செய்யவும். பின்னர் Status என்பதைக் கிளிக் செய்து, வயர்லெஸ் என்பதைக் கிளிக் செய்து தங்களது பாஸ்வேர்டை தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல், Macலிருந்து Applications/Utility ஆப்ஷனிற்கு சென்று Keychain Access என்பதைக் கிளிக் செய்யவும். நெட்வொர்க்கை தேர்வு செய்து, அதை இருமுறை கிளிக் செய்து show password ஆப்ஷனிற்கு சென்றால் அங்கு வைஃபை பாஸ்வேர்டு இருக்கும். மேலும், வைஃபை பாஸ்வேர்டு ரிவியலரை டவுன்லோடு செய்தவுடன் ஸ்கைப் மற்றும் AVG TuneUp போன்றவற்றை இன்ஸ்டால் செய்ய பரிந்துரை செய்யப்படும். ஆனால், அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம். இதை இன்ஸ்டால் செய்ததும், அனைத்து வைஃபை நெட்வொர்க் மற்றும் அவற்றின் பாஸ்வேர்டையும் நம்மால் தெரிந்துக்கொள்ளமுடியும்.

Read more | உண்மையை பேசியது குற்றமா? சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி கடிதம்!!

Tags :
Advertisement