For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தகாத உறவுக்கு இடையூறு.. கணவனை தீர்த்து கட்ட ஸ்கெட்ச் போட்ட மனைவி..!! கண்டித்த நண்பருடன் டீல்

In Thiruvannamalai district, the incident of wife killing her husband by poisoning him with alcohol has caused a shock.
01:07 PM Oct 26, 2024 IST | Mari Thangam
தகாத உறவுக்கு இடையூறு   கணவனை தீர்த்து கட்ட ஸ்கெட்ச் போட்ட மனைவி     கண்டித்த நண்பருடன் டீல்
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவரது மனைவி ரம்யா (30). இதில் ரம்யாவிற்கும் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் பெருமாள் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இது சுதகருக்கு தெரிய வரவே தகாத உறவை கைவிடுமாறு பல முறை கண்டித்துள்ளார்.

Advertisement

அதனை கேளாததால் தனது நண்பரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சீனு வளவனிடம் தனது மனைவியின் தகாத உறவு குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் சீனு வளவன், பெருமாளை சந்தித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியிருக்கிறார். அங்கு நடந்த டீல் தான் இருவரையும் கூட்டு சேர வைத்தது. தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை பெருமாள் மற்றும் சீனு வளவனுடன் சேர்ந்து கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியுள்ளார்.

இதனையடுத்து சீனுவளவன், சம்பவத்தன்று சுதாகரை கோழிப்புலியூர் கூட்ரோட்டிற்கு அழைத்து சென்று மது குடிக்க வைத்திருக்கிறார். பின்னர் இருவரும் ஆரியூர் கிராமத்தில் உள்ள தேக்கு தோப்புக்கு சென்றுள்ளனர். அங்கு மதுவில் விஷம் கலந்து சுதாகருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.. பின்னர் ஆலியூர்-கல்யாணபுரம் இடையில் ஏரிக்கரை அருகில் உள்ள காரியமேடை பகுதியில் சுதாகரை விட்டு விட்டு சீனு வளவன் மட்டும் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி சுதாகர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் அவரது மனைவி ரம்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது சுதாகர் இறந்து கிடந்ததை கண்டார். அதிகளவு மதுக்குடித்து இறந்திருக்கலாம் எனக்கருதிய உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டார்கள்.

இந்த மரணத்தில் சந்தேகம் அடைந்த சுதாகரின் தம்பி வினோத்குமார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாசில்தார் முன்னிலையில் சுதாகரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சுதாகர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதனையடுத்து ரம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர் . விசாரணையில் தான் ரம்யாவிற்கும் பெருமாளுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது சுதாகருக்கு தெரியவந்ததால், அவரது நண்பர் சீனுவளவன் மூலம் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது போலீசுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ரம்யா, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்த் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் கணவன் மற்றும் அவரது நண்பனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more ; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்.. எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ வெளியிடவில்லை..!! – இர்ஃபான் விளக்கம்

Tags :
Advertisement