முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.. அநியாயமா ஒரு உயிர் போச்சு..!! - பீகாரில் அதிர்ச்சி 

In the state of Bihar, a doctor removed a gallstone from a 15-year-old boy after watching a YouTube video.
02:08 PM Sep 09, 2024 IST | Mari Thangam
Advertisement

பிகார் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் யூடியூப் வீடியோ பார்த்து 15 வயது சிறுவனுக்கு பித்தப்பை கல் அகற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து சரண் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) குமார் ஆஷிஷ் கூறுகையில், இறந்தவர் சரண் மாவட்டம் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு கிருஷ்ண குமார். கோலு சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவரது குடும்பத்தினர் சரணில் உள்ள தர்மபாகி பஜாரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கோலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பித்தப்பையில் கல் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் பெற்றோரிடம் அனுமதி கோராமல் யூடியூப்பில் விடியோக்களைப் பார்த்து பித்தப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சையை மருத்துவரே மேற்கொண்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, கோலுவின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவரின் தாத்தா, ​​யூடியூப்பில் விடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை. கோலுவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கோலு உயிரிழந்தான் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக குடும்பத்தினர் செப். 7ல் அளித்த புகாரின்பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; 10 ஆம் வகுப்பு போதும்.. ஊர்க்காவல் படையில் வேலை..!! சொந்த ஊரிலே பணி.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Tags :
BiharGallstone removal treatmentYouTube videoபோலி மருத்துவர்
Advertisement
Next Article