முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

US Election 2024 | ட்ரம்ப் Vs கமலா ஹாரிஸ்: வெற்றி வாகை யாருக்கு? முன்னிலை நிலவரம் இதோ..

In the results released so far, former US presidential candidate Trump is leading. Democratic vice presidential candidate Kamala Harris has suffered a setback.
10:34 AM Nov 06, 2024 IST | Mari Thangam
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

அமெரிக்காவில் ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. தேர்வுக் குழு உறுப்பினர்கள் எனப்படும் எலெக்ட்ரோல் காலேஜ் முறைப்படி தான் வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இன்றைய தினமே முடிவுகள் தெரியவரக்கூடும். தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதுவரை வெளியான முடிவுகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜார்ஜியாவில் கமலா ஹாரிஸை விட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து 12% முன்னிலை வகிக்கிறார். 10 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் டொனால்ட் ட்ரம்ப் 95 இடங்களில் முன்னிலையும்,  கமலா ஹாரிஸ். 35 இடங்களில் முன்னிலையும்,  இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப்  வென்ற மொத்த மாநிலங்கள்:

கமலா ஹாரிஸ் வென்ற மொத்த மாநிலங்கள்:

Read more ; லஸ்ஸா காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு..!! லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள்..

Tags :
donald trumpkamala harrisUS Election 2024
Advertisement
Next Article