ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.. அதிமுக அதிரடி அறிவிப்பு..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணித்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் செந்தில்முருகன் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
அடுத்து சில தினங்களில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் பயணித்து வரும் செந்தில் முருகன், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
Read more ; பத்திரப்பதிவு ஆவணத்தில் எழுத்து பிழையா? ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா..?