முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”எதிர்காலத்தில் காத்திருக்கும் ஆபத்து”..!! ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

The study revealed that there is a danger that in the future the water will become unsustainable.
08:03 PM Aug 02, 2024 IST | Chella
Advertisement

பூமியில் சமீப காலமாக பல்வேறு காரணங்களால் பருவநிலை மாற்றத்தை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் நீர்களில் உயிரினங்களே வாழ முடியாத நிலை உண்டாகும் ஆபத்து உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Advertisement

உலகம் முழுவதும் 75% பகுதி கடலால் சூழப்பட்டுள்ள நிலையில், கடலில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் கடல் இருந்தாலும் நன்னீர் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. நன்னீர், கடல் நீர் என எதில் உயிரினங்கள் வாழ்ந்தாலும் அவற்றிற்கு ஆக்ஸிஜன் முக்கியம். நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் நீரில் உள்ள ஆக்ஸிஜன்களை செவில்கள் போன்ற பகுதிகளால் சுவாசித்து உயிர் வாழ்கின்றன.

ஆனால், சமீபமாக நீர்நிலைகளில் உள்ள நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் சரியான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வாயு மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன்கள் பெரும்பாலும் கடலில் இருந்தே பெறப்படுவதால் இதனால் மனித இனமும் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : கடலுக்குள் மூழ்கும் சென்னை..!! கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள்..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Tags :
ஆராய்ச்சியாளர்கள்உயிரினங்கள்மீன்கள்
Advertisement
Next Article