புது வருஷம் 2024ல் எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள்.! கண்டிப்பா படிங்க.!
2024 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. வரப் போகின்ற புது வருடத்தில் கிரகணங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்து ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். பிறக்க இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் கேது சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் பல்வேறு ராசிகளில் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இதனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்பாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். வர இருக்கின்ற புத்தாண்டில் கிரகணங்களின் இடப்பெயர்ச்சியால் இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு புது வருடத்தின் தொடக்கத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் 10-ஆம் இடத்திலும் சனி பதினொன்றாம் இடத்திலும் அமைகிறது. மேலும் குரு பனிரெண்டாம் இடத்திலும் கேது ஐந்தாம் இடத்திலும் புதன் ஏழாம் இடத்திலும் அமையும். கிரகங்களின் இந்த அமைப்பால் ரிஷப ராசிக்காரர்கள் இந்த வருடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனினும் அவர்களது அனைத்து முயற்சிகளுக்கும் பலன் தரும் ஆண்டாகவே புது வருடம் அமையும். மேலும் இடம் மாற்றம் மற்றும் பதவி மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். வேலைகளை தவறாமல் செய்து முடித்து திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடத்தின் தொடக்கத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. குரு ஒன்பதாவது இடத்திலும் கேது இரண்டாவது இடத்திலும் சூரியன் செவ்வாய் ஏழாவது இடத்திலும் சனி எட்டாவது இடத்திலும் இருக்கிறது. புதன் நான்காவது இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு ஆண்டாக அமையும். கிரகணங்களின் அமைப்பு காரணமாக பல தடைகள் வந்தாலும் முழு முயற்சியால் அவற்றை முறியடிக்கலாம். வேலை மற்றும் திறமை அலுவலகங்களில் அனைவராலும் உணரப்படும். எனினும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை தாமதம் ஆகலாம். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கத்தை தவிர்க்கவும். சகப் பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் துர்கா தேவியை கும்பிடுவது நலன் பயக்கும்.