For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கஞ்சா வழக்கில் துருவி துருவி கேள்வி!! சவுக்கை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை!!

06:20 AM May 21, 2024 IST | Baskar
கஞ்சா வழக்கில் துருவி துருவி கேள்வி   சவுக்கை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை
Advertisement

போலீஸ் விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் இருந்து சவுக்கு சங்கர் தேனிக்கு அழைத்து வரப்பட்டார்.

Advertisement

சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். இவர் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த கடந்த 4-ம் தேதி தேனியில் கோவை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம், ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து 2 நாட்கள் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மேலும் திங்கள்கிழமை மாலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். இவருக்கு கஞ்சா விற்றதாக பரமக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் அழைத்து வரப்பட்டார். ஆய்வாளர் உதயகுமார் விசாரணையைத் தொடங்கினார். விசாரணை முடிந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு சவுக்கு சங்கரை போலீஸார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

மேலும் வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வரப்பட்டார்.

பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்கில் ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு பிணை (பெயில்) குறித்த விசாரணை நடைபெற்றது. இதில் பெலிக்ஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு வழங்கினர். இதனை விசாரித்த நீதிபதி போலீஸ் காவலில் ஒருநாள் விசாரிக்க அனுமதி வழங்கி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.

Read More: குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது..!

Advertisement