For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்? - போலீசார் விளக்கம்

In the Armstrong murder case, the police have given an explanation regarding the encounter with the rowdy Thiruvenkadam.
01:43 PM Jul 14, 2024 IST | Mari Thangam
ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்    போலீசார் விளக்கம்
Advertisement

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில், ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரை, போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலில், ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை் தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கினார்.

போலீசார் சுற்றி வளைக்கும்போது ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதையடுத்து, ரவுடி திருவேங்கடத்தை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரவுடி திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது.

மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டகையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more | பரபரப்பு.. டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! பின்னணியில் இருப்பது யார்? வெளியான தகவல்!!

Tags :
Advertisement