முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கி முக்கிய அறிவிப்பு... நாளை முதல் 20-ம் வரை தேர்தல் பத்திரம் விற்பனை...! முழு விவரம்..

08:09 AM Nov 05, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தேர்தல் பத்திரங்களை, 06.11.2023 முதல் 20.11.2023 வரை, பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னர் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது.

Advertisement

2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டு 2022 நவம்பர் 7ஆம் தேதி அதில் திருத்தம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யாரும் வாங்கலாம். ஒரு நபர் ஒரு தனிநபராக இருப்பதால், தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29 ஏ-ன் கீழ் (1951 -ன் 43) பதிவு செய்யப்பட்ட மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதி பெறும்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கிளைக்கு தேர்தல் பத்திரங்களை வெளியிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiElection bondpolitical partysbiSTATE BANK OF INDIA
Advertisement
Next Article