முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி | அடுத்தது என்ன? இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

In the 2024 parliamentary elections, the AIADMK formed an alliance with the DMDK and faced the election and faced defeat in all the constituencies. In this case, Edappadi Palanichamy has announced that he is going to consult with the association executives about the results of the parliamentary constituencies.
06:31 PM Jul 05, 2024 IST | Mari Thangam
Advertisement

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. குறிப்பாக தென்சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர், தேனி, ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் டெப்பாசிட்டை இழந்தது.

Advertisement

இந்நிலையில்,  தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, 10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை 12ம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி 13ம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் 15ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி 16ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் 17ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல் 18ம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் 19ம் தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய மாவட்டங்களில் ஆலோசனை ஆலோசனை நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள்,

பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read more | “ஜெயிலுக்கு அனுப்பனும்.. கொந்தளித்த டாக்டர்” – பக்கம் பக்கமா பதிலடி கொடுத்த சமந்தா!!

Tags :
AIADMKEdappadi PalanichamyParliamentary Elections
Advertisement
Next Article