முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்..!! வானிலை அலெர்ட்..!!

Tamil Nadu is likely to receive rain for 7 days, according to the Meteorological Department.
02:35 PM Aug 27, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆக.27) முதல் செப்.2ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை என்று தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வங்கக்கடல், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 - 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 - 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Read More : மக்களே..!! மின்சார வாரியத்தின் அறிவிப்பை கவனிச்சீங்களா..? இனி எல்லாம் மாறுது..!!

Tags :
rainTamilnaduமழை
Advertisement
Next Article