முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எக்ஸ் தளத்தில் எதாவது எழுதவில்லை என்றால் பழனிச்சாமிக்கு தூக்கம் வராது..!! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்

In response to Edappadi Palaniswami, Tamil Nadu Medical and Public Welfare Minister M. Subramanian has issued a statement.
09:28 AM Dec 05, 2024 IST | Mari Thangam
Advertisement

அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.

Advertisement

எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் 'ஆண்ட்ராய்டு போபியோ' வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5ஆம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.

Read more ; உடல்முழுவதும் முடிகளுடன் பிறந்த குழந்தைகள்!. ஸ்பெயினில் அரியவகை நோய்!. பெற்றோர்கள் செய்த தவறே காரணம்!.

Tags :
edappadi palaniswamiM. Subramaniantn government
Advertisement
Next Article