உச்சக்கட்ட பரவலில் கொரோனா!… கட்டுப்பாடுகளை அறிவித்த ஐரோப்பிய நாடு!… அச்சத்தில் மக்கள்!
கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் Monica Garcia அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் புதிய மாறுபாடு ஜெ.என்.1 கொரோனா அச்சுறுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புகளால் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிவருகிறது. இருப்பினும், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. அந்தவகையில், இந்தியாவில் சில மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பின் தாக்கம் உச்சமடைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் Monica Garcia அறிவித்துள்ளார். மேலும், உடல்நிலை பாதிக்கக்கூடிய மக்களை பாதுகாக்கும் பொருட்டே இந்த முடிவு என்றும், இது தாமாகவே மக்கள் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பல ஸ்பெயின் பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடந்த வாரம் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ளன. அதன்படி ஸ்பெயின் நாடுமுழுவதும் முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள், தனியார் கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பல் மருத்துவமனைகள் போன்ற பிற மருத்துவ வசதிகளிலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.