For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இது வரை இல்லாத அளவில்... அதுவும் ஒரே நாளில்...! தமிழக பதிவுத்துறையில் புதிய சாதனை...! என்ன தெரியுமா...?

06:00 AM Dec 16, 2023 IST | 1newsnationuser2
இது வரை இல்லாத அளவில்    அதுவும் ஒரே நாளில்     தமிழக பதிவுத்துறையில் புதிய சாதனை     என்ன தெரியுமா
Advertisement

ஒரே நாளில் ரூ.192 கோடி வசூல் செய்து தமிழக பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

Advertisement

சுபமுகூர்த்த தினமான நேற்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ரூ.192 கோடி வசூல் செய்து தமிழக பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 14.12.2023 அன்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இது வரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement