முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில்..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

07:28 AM Dec 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும். டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 4ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாடுமழை
Advertisement
Next Article