முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில்..!! 14 மாவட்டங்கள் டார்கெட்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

08:50 AM Nov 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
14 மாவட்டங்கள்சென்னைவடகிழக்கு பருவமழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article