For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பள்ளியில் வயிற்று வலியால் அலறிய மாணவி.. திடீரென பிறந்த குழந்தை..!! அண்ணன் செய்த வேலையா இது? - ஆடிப்போன நாமக்கல்

In Namakkal district, a class 11 student gave birth to a baby due to abdominal pain at school
01:47 PM Nov 08, 2024 IST | Mari Thangam
பள்ளியில் வயிற்று வலியால் அலறிய மாணவி   திடீரென பிறந்த குழந்தை     அண்ணன் செய்த வேலையா இது    ஆடிப்போன நாமக்கல்
Advertisement

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. சிறுமிகளிடம் இருந்து பெரிதாக எதிர்ப்பு வராது என்பதால் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குரிய நபர்களே அதிக அளவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மாணவியின் சித்தி மகன் ரங்கராஜன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமின் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; நிலவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு எது தெரியுமா..? இங்கு அரிய வகை விலங்குகளும் இருக்கிறதாம்..!!

Tags :
Advertisement