கள்ளக்காதலியுடன் லாங் டிரைவ்.. கையும் களவுமாக பிடித்த மனைவி மீது தாக்குதல்..!! - வைரலாகும் வீடியோ
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவன் தனது கள்ளகாதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் தில்வாரா காவல் நிலையப் பகுதியில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அனிதா படேல், சில வருடங்களுக்கு முன்பு சாஸ்திரி நகரில் வசிக்கும் கிருஷ்ண குமார் படேல் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பெண்ணின் கணவருக்கு நீலம் ராஜ்புத் என்ற வேரறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகுமாருக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று தனது கணவன் காதலியுடன் லாங் டிரைவ் சென்றிருப்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பெண் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விஷயம் பெரிதாகி, கிருஷ்ணகுமாரும், அவரது காதலியும் அனிதாவை கடுமையாக தாக்கினர். மேலும், அவர் அணிந்திருந்த தங்க செயினை அந்த பெண் பறித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார். இந்த சண்டையை பார்த்து அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். அதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பாதிக்கப்பட்ட அனிதா படேல் தனது கணவர் மற்றும் அவரது காதலி மீது தில்வாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முழு விசாரணையும் தொடங்கி உள்ளனர். விசாரணையின் போது, சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Read more ; ‘Iran Hit List’ இஸ்ரேலிய தலைவர்களை குறிவைத்த ஈரான்.. அடுத்த டார்கெட் நெதன்யாகு?