சென்னையில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்கள் குத்தாட்டம்..!! DJ இசையுடன் பாரில் நடந்த கச்சேரி..!! அதிரடி காட்டிய போலீஸ்..!!
சென்னை சைதாப்பேட்டை அருகே ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் பாரில் இரவு நேரங்களில் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களின் ஆபாச நடன நிகழ்ச்சி நடப்பதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட தனியார் பார், விதிமீறிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, முகப்பேரை சேர்ந்த 47 வயது கிளப் ஓனர் தாணு, ஓட்டல் சப்ளையர்கள் வினோத்குமார் (33), பாலமுருகன் (22), கொடிஷ் (27), அக்கவுண்டன்ட் விஜயா அமிர்தராஜ் (38) உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆனால், கடந்த மாதம் 27ஆம் தேதியே இவர்கள் அனைவருமே ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டம் இருந்ததால், மீண்டும் இளம்பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
எனவே, மீண்டும் போலீசுக்கு புகார் சென்றதை அடுத்து, கடந்த 4ஆம் தேதி ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் தனியார் பாரில் திடீர் சோதனையை நடத்த உள்ளே சென்றனர். அப்போது, இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன், மிகவும் ஆபாசமாகவும், போதையிலும் டான்ஸ் ஆடி கொண்டிருந்துள்ளனர். அனுமதி நேரத்தை கடந்து, பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதால், பார் உரிமையாளர் தாணு, விஜய் அமிர்தராஜ் (38), வினோத் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தனைக்கும் கடந்த மாதம் 27ஆம் தேதிதான் ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். இப்போது மறுபடியும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதற்காக கைதாக சிறைக்கு சென்றுள்ளனர்.