Gold Rate Today : 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக தங்கம் விலை உச்சத்தை எட்டியது. கடந்த ஜூலையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்பட்டது.
ஆனால், தற்போது இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. முதலீட்டார்கள் அதிகம் தங்கத்தை வாங்கி வருவதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.106.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read more ; ‘பான்’ கார்டு விபரங்களை, அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது!. மத்திய உள்துறை அமைச்சகம்!