என்னங்க சொல்றீங்க.. ஹாரன் அடித்தால் சிவப்பு சிக்னல் மாறாதா..!! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த சென்னை போலீஸ்
சென்னை சிக்னல்களில் ஹாரன் சத்தம் அதிகமாக இருந்தால் சிவப்பு சிக்னல் மாறாதாம். அமைதியாக இருந்தால் மட்டுமே பச்சை சிக்னல் விழுமாம். இந்த புதிய நடைமுறை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் தான் இந்த ஒலி மாசு அதிகமாக இருக்கிறது. முதற்கட்டமாக ஒலி மாசு குறித்து சென்னையில் ஆய்வு நடத்த அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க இப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாகச் சென்னையில் இந்த விதிகள் செயல்படுத்தப்படுகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், வாகன பயன்பாடும் அதிகரிக்கிறது. வாகனங்களில் இருந்து வரும் ஹாரனே ஒலி மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவற்றில் இருந்து தொடர்ச்சியாக வெளிவரும் இரைச்சலால் நமது உடல்நிலை பாதிக்கப்படும். மேலும், இதனால் மன ரீதியான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகமாம்.
சாலைகளில் சிக்னலில் இருக்கும் போது தான் ஹாரன் உச்சத்தில் இருக்கும். சிவப்பு சிக்னல் இருக்கும் போதே பலரும் ஹாரனை அடிக்க தொடங்கிவிடுவார்கள். இதைத் தடுக்க 'Punishing Signals' என்ற முறையைக் கொண்டு வரவும் சென்னை டிராபிக் போலீஸ் திட்டமிட்டு வருகிறதாம். ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
அதாவது சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்படும். அவை ஒலியின் அளவை தொடர்ந்து கணிக்காணிக்கும். குறிப்பிட்ட அளவை தாண்டி ஹாரன் சத்தம் கேட்டால் சிவப்பு சிக்னல் மாறாதாம். கவுண்டு டவுன் மீண்டும் ஆரம்பிக்கும். மற்றொரு முறை அது முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். எப்போது ஹாரன் சத்தம் குறைவாக இருக்கிறதோ, அப்போது தான் பச்சை சிக்னல் மாறுமாம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் ஒலி மாசு குறையும் என்கிறார்கள்..
Read more ; உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இதை சாப்பிடாதீங்க..!!