முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Men's Health | 45 ஆண்டுகளில் பாதியாக குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை.!! ஷாக்கிங் ரிப்போர்ட்.!!

02:56 PM Apr 04, 2024 IST | Mohisha
Advertisement

Men's Health: கடந்த 45 ஆண்டுகளில் மனித விந்தணுக்களின்(Sperms) எண்ணிக்கை பாதியாக குறைந்து இருப்பதாக முடிவுகள்(Reports) தெரிவிக்கிறது.

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் செயற்கை கருத்தரிப்பு(Fertility) மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு எங்கோ ஓரிடத்தில் மட்டும் இருந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இன்று வீதிக்கு வீதி தொடங்கப்பட்டிருக்கிறது. இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கு ஏற்படும் சிக்கலே இதுபோன்ற கருத்தரிப்பு மையங்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. 1973 ஆம் ஆண்டு முதல் 2018 வரை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளில் மனித இனத்தின் விந்தணுக்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து இருக்கிறது என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

மனித இனப்பெருக்கம்(Men's Health)தொடர்பான அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவில் கடந்த 45 வருடங்களில் மனிதர்களில் விந்தணுக்களின்(Sperms) எண்ணிக்கை பாதியாக குறைந்து இருக்கிறது என்ற முடிவு வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் 1973 ஆம் வருடத்தில் இருந்து 2018 ஆம் வருடம் வரை 53 நாடுகளைச் சேர்ந்த 57,000 ஆண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இவர்களிடமிருந்து விந்தணு மாதிரிகள் புறப்பட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளில் விந்தணுக்களின் செறிவு 51.6 சதவீதம் குறைந்து இருப்பதாகவும் மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 62.3 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விந்தணுக்களின் செறிவு மற்றும் அவற்றின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் சமூக காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்தல் உடல் பருமன் மது மற்றும் போதைப் பொருள்களின் பழக்கம் ஊட்டச்சத்து குறைபாடு மன அழுத்தம் ரசாயனங்கள் காற்று மாசுபடுதல் உடல் உழைப்பு இல்லாமல் போன்றவற்றை விந்தணுக்களின் குறைவிற்கு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். கெட்ட பழக்கங்களை தவிர்த்து விட்டு முறையான தூக்கம் நல்ல ஓய்வு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More: பெயின் கில்லர் மாத்திரை அடிக்கடி எடுப்பவரா நீங்க? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு!

Tags :
#Research45 years declineMedical ReportMen.s HealthSpermCount
Advertisement
Next Article