For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும்..!!' வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்..

In Bangladesh, students are again protesting to demand the resignation of all judges, including the Chief Justice of the Supreme Court.
01:44 PM Aug 10, 2024 IST | Mari Thangam
 அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும்      வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்
Advertisement

வங்கதேசத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறையால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேறி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) பத்திரமாக இந்தியா வந்தடைந்தார். இந்திய விமானப்படை (IAF) மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விமானத்தை முழுமையாக ஒருங்கிணைத்து, காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஏர்பேஸுக்கு அவர் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய மேம்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தினர்.

இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் ஆக. 8 அன்று இரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் புதிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளன. வங்கதேச உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசை கலந்து ஆலோசிக்காமல், தலைமை நீதிபதி நீதிபதிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more ; Wayanad Landslide | நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி..!!

Tags :
Advertisement