For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலத்திற்கு அடியில் வித்தியாசமான உலகம்..!! சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள்! எங்கே தெரியுமா?

In Australia there is a village under the ground with about 1500 houses, offices, commercial complexes, etc. It is amazing and surprising.
06:12 PM Jul 14, 2024 IST | Mari Thangam
நிலத்திற்கு அடியில் வித்தியாசமான உலகம்     சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள்  எங்கே தெரியுமா
Advertisement

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க பயன்படுத்தத் தொடங்கினர்.

இருப்பினும், குளிர்காலத்தில் வெப்பநிலை சீராக இருப்பதாலும், கோடைக்காலங்களில் வெப்பநிலை 45 டிகிரியை விட அதிகமாகும் என்பதாலும், வெப்பத்தை தாங்கமுடியாமல் மக்கள் அடிப்படை வசதிகளோடு வீடுகளை கட்டி சுரங்கத்திற்குளேயே வசித்து வருகின்றனர். படிப்படியாக, சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தையும் சுரங்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளனர்.

வெளியில் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் உள்ளே வந்தால் பிரமிக்க வைக்கும். மேலும் இந்த கிராமத்திற்கு, 25 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து பைப் மூலம் நிலத்திற்கு அடியிலேயே நீரை கொண்டுவந்து பயன்படுத்திவருகின்றனர். இந்த கிராம மக்களின் அழகிய வாழ்க்கை முறை அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை மூடி மறைக்க சதி நடக்கிறதா? – அன்புமணி கேள்வி

Tags :
Advertisement