மங்களகரமான மஞ்சள் கலரில்.. சும்மா வானத்தை தெறிக்கவிடும் தவெக-வின் கொடி..! ஒத்திகை பார்த்தாரா விஜய்…!
வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தவெக-வின் கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், இந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலத்தில், கொடி ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார் நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட விழாக்களில், அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த விஜய். கடந்த இரண்டு வருடமாக அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயரை, தமிழக வெற்றி கழகம் என தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதிவு செய்தார்.
விஜய்யின் இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்படைய வைத்தது. இது குறித்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், அதோடு 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் கூறினார். அதனைத்தொடர்ந்து கட்சி ஷார்ப்பாக உறுப்பினர் சேர்க்கை செயலி ஒன்றை அறிமுகப்டுத்துதி, அதன் மூலம் உறுப்பினர்களையும் சேர்த்து குவித்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அக்கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் வாகை மலர் இடம்பெறவுள்ளதாக வெளியாகியிருந்தது. விஜய்யின் கட்சி கொடியில் வாகை மலர் இடம்பெறுகிறது என்ற தகவல் பட்டி தொட்டி எங்கும் பரவி, அக்கட்சியின் தொண்டர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் தற்போது சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. இதனை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கொடி ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள கொடி மஞ்சள் நிறத்திலும், அதற்கு நடுவில் விஜய்யின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றப்பட்டுள்ள கொடி தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியா அல்லது ஒத்திகைக்காக ஏற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான தகவல் எதுவும் இல்லை.
Read More: இந்தியில் கலைஞர் நாணயம்.. ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? – ஸ்டாலின் விளக்கம்