முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election: 2019-ல் 11 மாநிலத்தில் வாக்கு சதவீத எண்ணிக்கை குறைவு...!

05:57 AM Apr 06, 2024 IST | Vignesh
Advertisement

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுடனான மாநாட்டை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்தியது.

Advertisement

பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019 மக்களவைத் தேர்தலின் போது தேசிய சராசரியான 67.40 சதவீதத்தை விட குறைவாக வாக்குகள் பதிவானது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த 50 கிராமப்புற மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை ஆகும்.

நேற்று நடந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மொத்தம் 266 நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த தேர்தலின் போது குறைந்த அளவு வாக்குகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். இத்தகைய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆராயுமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.

Advertisement
Next Article