சமூக வலைத்தளத்தில் இனி இதை செய்தால் 3 ஆண்டு சிறை + 3 லட்சம் அபராதம்....! காவல்துறை அறிவிப்பு
அனுமதியின்றி தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம்.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில்; சென்னை பெருநகர காவல்துறையில் இந்த அறிவிப்பில், பிறரின் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் வெளியிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் லட்சக்கணக்கில் அபராதமும் செலுத்த நேரிடும்.
அனுமதியின்றி தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்.
மேலும் சைபர் க்ரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவசர உதவி பெறுவதற்கான லைஃப் லைன் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம். தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற என் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.