தினமும் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவரா.? நீங்கள் தவிர்த்து கொள்ள வேண்டிய உணவுகளின் லிஸ்ட்.!
மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வு அத்தியாவசியமான ஒன்றாகிறது. எனினும் சில நோய்களால் அவதிப்படும் போது அவற்றிற்கு மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் மருத்துவர் பரிந்துரைத்த சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது சில உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகிறது. ஏனெனில் அந்த மருந்துகளும் உணவும் சேர்ந்து நம் உடலுக்கு எதிர்வினை ஏற்படுத்தக்கூடும். எந்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
டைஜாக்ஸின் என்ற மருந்து இதய செயலிழப்பு நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மருந்தாகும். இந்த மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தைராய்டு பிரச்சனையை சரி செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் லெவோதைரொக்சின் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளும் போதும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் மருந்து ரத்தத்தால் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதனால் எதிர் விளைவுகள் ஏற்படக்கூடும்
உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஜூஸ் வகைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக டெக்னோர்மின் மருந்தை ஒருவர் உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்கிறார் என்றால் அந்த நபர் ஆப்பிள் ஜூஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஜூஸ் மருந்து ரத்தத்தால் அதிகப்படியாக உரிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் வாழைப்பழம் போன்ற பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பொட்டாசியம் சத்து இந்த மருந்துகளுடன் கலக்கும் போது இருதய தசைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.