முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! சென்னை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

10:36 AM Nov 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர்.

Advertisement

மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.

அந்தவகையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை, குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால், இந்த மாதத்திற்கான ரேஷன் குறைதீர் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ”நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நவ.18 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னைதமிழ்நாடு அரசுபொதுவிநியோக திட்டம்ரேஷன் அட்டைதாரர்கள்
Advertisement
Next Article