For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn govt: இந்த 4 மாவட்ட வணிகர்கள் வட்டி செலுத்த தேவையில்லை...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

06:00 AM Dec 21, 2023 IST | 1newsnationuser2
tn govt  இந்த 4 மாவட்ட வணிகர்கள் வட்டி செலுத்த தேவையில்லை     தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள், டிசம்பர் 20, 2023-இல் இருந்து டிசம்பர் 27, 2023 வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புயலினால் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள், டிசம்பர் 20, 2023-இல் இருந்து டிசம்பர் 27, 2023 வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள வணிகர்கள்,நவம்பர் வருவாய் மாவட்டங்களில் உள்ள மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை நீட்டிக்கப்பட்ட டிசம்பர் 27, 2023 வரை தாக்கல் செய்வதற்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement