மத்திய அரசு அதிரடி..! சமையல் எண்ணெய் இறக்குமதி வரி 5.5% லிருந்து 27.5% ஆக உயர்வு...!
பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5.5% லிருந்து 27.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் தொழில் துறையினருடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, இதில் சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சில்லறை விலைகளைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், எளிதாக்கவும், மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை வரி 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய்கள் மீதான வேளாண் செஸ் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கச்சா சோயாபீன், சூரியகாந்தி, பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 32.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நமது நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.